Home Blog

முகம் தங்கம் போல ஜொலிக்க கற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க..!!

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை போக்கிவிடும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சல் உண்டாகும்.

அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும்போது கற்றாழையின் முழுப்பலன் கிடைப்பதோடு அழகை அதிகரிக்கச் செய்யும். அவ்வாறு கற்றாழையுடன் எந்த பொருளை சேர்த்தால் என்ன பயன் தரும் எனப் பார்க்கலாம்.

மஞ்சள் :இந்த குறிப்பு அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு உபயோகமானது. கற்றாழையுடன் சிறிது மஞ்சல் குழைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் வழியாது. முகப்பருக்களின் தீவிரம் குறைந்து சருமம் பொலிவாகும்.

வெள்ளரிக்காய் :சுருக்கம் இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் ஏற்றதாகும். கற்றாழையுடன் சிறிது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் 3 முறை செய்தால் நுண்ணிய சுருக்கங்களும் காணாமல் போய்விடும்.

தக்காளி :முகம் கருமை படர்ந்து இருந்தால் அல்லது அதிக எண்ணெய் இருந்தாலும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். தக்களியின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் போடவும். இது நிறத்தை பொலிவு படுத்தும்.

அரிசி மாவு :முகம் மரும் கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை அகற்ற இந்த குறிப்பு மிகவும் ஏற்றது. அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் கற்றாழையை கலந்து முகம் கழுத்தில் மென்மையாக தேய்க்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பால் :வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். பாலில் சிறிது கற்றாழை கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மென்மையாகும். மினுமினுப்பை தரும். ஈரப்பதம் அளிக்கும்.

வாழைப் பழம் :சருமம் தொங்கி வயதான தோற்றம் இருப்பவர்கள் இந்த குறிப்பை செய்து பாருங்கள். வாழைப்பழத்தை மசித்து அதனுடன் கற்றாழையின் சதைப் பகுதியை கலந்து முகத்தில் போடவும் 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் சருமம் இறுகும்

இந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்களாம்..!!

0

நாங்களும் நல்லா தானடா இருக்கோம், எங்கள ஒருத்தியும் பாக்க மாட்றா? என்று சுப்ரமணியபுரம் சசிகுமாரை போல் ஃபீல் பண்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான விடை. இதுக்கு எல்லாம் அவங்க பிறந்த ராசி தான் காரணமாம்!

ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும் என்கிறது நமது ஜோதிடம்.

வாழ்க்கை என்பது அவர்களுடைய தோற்றம், பேசும் திறன், பழகும் பண்பு போன்றவை. அதில் குறிப்பிட்ட ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாம். சரி, அதில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாக்கலாமா?

மிதுனம்மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தொற்றத்தை கொண்டவர்களாகவும், பெண்களின் கவனத்தை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் அவர்களது கடைக் கண் பார்வை மூலமே ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.

இவர்களைச் சுற்றி எப்பொழுதும் அன்பையும், பாசத்தையும், காதலையும் பொழியும் பெண்கள் இருப்பார்களாம்.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காதல் மன்னனாக வலம் வருவார்களாம். மேலும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப் படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்களாம். இந்தப் பண்புகளினால் பெண்களைக் கவரும் ஆண் ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மிதுனம்.

சிம்மம்அடுத்த இடத்தில் இருப்பது சிம்ம ராசி ஆண்கள். மற்றவரைப் புரிந்து நடப்பதிலும், உறவுகளை வலுப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாம்.இயற்கையாகவே சிம்ம ராசியில் பிறந்தவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாகவும், அடக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.இவர்கள் பெண்களிடம் வழிந்து பேசும் போதும்

அதுவும் பல பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் அளவாகப் பேசும் திறமை படைத்தவர்களாம்.குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்கக் கூடியவர்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள். இதைத் தவிர ஒரு லட்சிய பிடிப்புடன் இருக்கும் இவர்களது இயல்பு பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

துலாம்அடுத்த இடத்தில் இருப்பது துலாம் ராசி ஆண்கள். பெண்களுடனான உறவுகளை இவர்கள் மதித்து நடப்பதைப் பார்த்தே பல பெண்கள் இவர்களை விரும்புவார்களாம்.பேச்சு திறமையும் இவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் தானாம், மேலும் இவர்கள் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் போறாமைப் படும் அளவிற்கு

உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்களாம்.இவர்களிடம் பேசினால் அனைத்தையும் மறந்து இவர்களது பேச்சிற்கே அடிமையாகி விடுவோமாம், இதுவே இந்த ராசியைப் பெண்களை கவரும் ராசிகளின் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது.

மேஷம்நான்காவதாக இருக்கும் ராசி மேஷம். மேஷ ராசி ஆண்கள் அனைவரையும் கவரும் முக அமைப்பும், உடல் தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களுடைய இந்த வசீகரமே பல பெண்களை இவர்களை நோக்கி இழுக்குமாம்.

இவர்கள் ஒரு தலை சிறந்த காதலர்களாம், ரசித்து ரசித்துக் காதல் செய்யக் கூடியவர்கள் மற்றும் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களும்.மேஷ ராசி ஆண்கள் கவர்ச்சிகரமானவர்களாக மட்டும் இல்லாமல் புத்திசாலிகளாகவும் இருப்பவர்கள் என்பதால் இது அவர்களுக்குக் கூடுதல் பலம்.

ராசி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்கள் மத்தியில் எப்படி முன் நிறுத்துகிறோம் என்பதிலேயே அவர்களது கவர்ச்சி அடங்கியுள்ளது.நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் சரி பெண்களை அதிகம் கவரும் ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், பெண்களை மதியுங்கள்.

காதலியாக, தோழியாக, சக மனிதியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், இதுவே பெண்களை அதிகம் கவரும் ஒன்றாகும்.தனக்கும் தனது கனவு மற்றும் எண்ணங்களுக்கு மரியாதை கொடுக்கும் எந்த ஆணையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

டீசல் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தற்போது டீசல் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினால் தனியார் பஸ்களுக்கு டீசலை வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை 25% இற்கும் மேல் குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!!

நடைபெற்று முடிந்து பெறுபேறுகள் வெளியாகிய 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா

எகொடவெல தெரிவித்துள்ளார்.பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து

புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் இம்முறை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் பரீட்சைஇடம்பெற்றது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.பச்சிளம் குழநதைக்கு தாய்ப்பால் கொடுப்பது அதன் ஆரோக்கியத்திற்க பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும்.

குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறையும். ஒவ்வாமை பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. டைப்-1, டைப்-2, நீரிழிவு நோயும் குழந்தையை நெருங்காது.

காதுகாளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இரைப்பை குடல் அழற்சி பாதிப்பும் ஏற்படாது.மூளையின் வளர்ச்சி சீராக நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும்.போலியோ, டெட்டனஸ் டிப்தீரியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ப்ளூபய்ஸா போன்ற தடுப்பூசியின் செயல் பாட்டுக்கு தாய்ப்பால் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது அவசியமானது. அது அறிவாற்றல் வளர்ச்சி செயல்திறனுடன் தொடர்புடையது.நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் குழந்தை அவதிப்படும் வாய்ப்பு குறைவு.-News & image Credit: maalaimalar

சாப்பிட்டதும் சர்க்கரை நோயை விரட்டும் அது தான் தொட்டாற்சிணுங்கி.!

தொட்டாற்சிணுங்கி என்னென்ன மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.தொட்டாற்சிணுங்கி மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும்,

அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும்.

சர்க்கரைக்கு நோய்க்கு:தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல்:சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்ஸ் அல்லது அரை அவுன்ஸ் வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க:தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக்க வேண்டும். சூடு தணிந்த பின் கஷாயத்தை வடிகட்டி, அரை அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) நஷ்டமும் நீங்கும்.

புண்கள்,வெட்டுக்காயங்கள் குணமாக:இந்த இலையின் சாறு புண்களை குணப்படுத்தும், வெட்டுக் காயங்களை குணப்படுத்த முழுச் செடியையும் அரைத்து சாறு எடுத்து தினமும் இரண்டு தடவை தடவி வந்தால் பலன் கிடைக்கும்.

மூட்டு வீக்கம்:கைகால்களில் ஏற்படும் மூட்டு வீக்கத்தை குணப்படுத்த தொட்டாற்சினிங்கி இலையை மையாக அரைத்து பூசலாம். அலர்ஜி, தோல் தடிப்புகளும் இதற்கு கட்டுப்படும்.- source: seithisolai

தெருவோரத்தில் வளரும் குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க!

குப்பைமேனி செடி அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குண நலன்களையும் கொண்டுள்ளது. தேவையற்ற முடி அகற்றுதல் முதல் சளி பிரச்சினை, இருமல் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, இது ஏராளமான பயன்களை கொண்டுள்ளது.

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி, கால் வலி, மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும்,. அவர்கள் குப்பை மேனியை கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.- source: maalaimalar

எந்த கிழமையில் கருட பகவானை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும்.!

நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு.

நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.

எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.-News & image Credit: maalaimalar

இலங்கை வாழ் மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!!!

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 5, 6 மற்றும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பபடிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை, மே 10 முதல், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.immigration.gov.lk/ என்னும் வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலமோ அல்லது 0707101060 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு

செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கான கணினி அமைப்பை சீர் செய்யும் பணியில் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதுடன் கூடிய விரைவில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருந்துவதுடன், திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்கும் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!