2025-2026 கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது – பள்ளிக்கல்வித் துறை
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான தொடக்கத் தேதி, பொதுத் தேர்வுகள், விடுமுறைகள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்கள் இந்த நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.
கல்வியாண்டு தொடக்கம்:
2025 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகிறது
அரசு விடுமுறைகள்:
தேதி | பண்டிகை / சிறப்பு நாள் |
ஜூன் 7, 2025 | பக்ரீத் |
ஜூலை 6, 2025 | மொஹரம் |
ஆகஸ்ட் 15, 2025 | சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 16, 2025 | கிருஷ்ண ஜெயந்தி |
ஆகஸ்ட் 27, 2025 | விநாயகர் சதுர்த்தி |
செப்டம்பர் 5, 2025 | மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தினம் |
அக்டோபர் 1, 2025 | ஆயுத பூஜை |
அக்டோபர் 2, 2025 | விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி |
அக்டோபர் 20, 2025 | தீபாவளி |
டிசம்பர் 25, 2025 | கிறிஸ்துமஸ் |
ஜனவரி 1, 2026 | ஆங்கிலப் புத்தாண்டு |
ஜனவரி 14, 2026 | பொங்கல் |
ஜனவரி 15, 2026 | திருவள்ளுவர் தினம் |
ஜனவரி 16, 2026 | உழவர் திருநாள் |
ஜனவரி 26, 2026 | குடியரசு தினம் |
பிப்ரவரி 1, 2026 | தைப்பூசம் |
மார்ச் 20, 2026 | தெலுங்கு வருடப்பிறப்பு |
மார்ச் 21, 2026 | ரமலான் |
மார்ச் 31, 2026 | மஹாவீர் ஜெயந்தி |
ஏப்ரல் 3, 2026 | புனித வெள்ளி |
ஏப்ரல் 14, 2026 | தமிழ் வருடப்பிறப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் |
தேர்வுகள்:
தொடக்க நாள் | முடிவு நாள் | தேர்வு / விடுமுறை |
ஜூலை 16, 2025 | ஜூலை 18, 2025 | முதல் இடைப்பருவத் தேர்வு |
செப்டம்பர் 18, 2025 | செப்டம்பர் 26, 2025 | முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு |
நவம்பர் 11, 2025 | நவம்பர் 13, 2025 | இரண்டாம் இடைப்பருவத் தேர்வு |
டிசம்பர் 15, 2025 | டிசம்பர் 23, 2025 | இரண்டாம் பருவம்/அரையாண்டுத் தேர்வு |
ஜனவரி 8, 2026 | ஜனவரி 21, 2026 | முதல் திருப்புதல் தேர்வு |
ஜனவரி 27, 2026 | பிப்ரவரி 4, 2026 | இரண்டாம் திருப்புதல் தேர்வு |
பிப்ரவரி 17, 2026 | பிப்ரவரி 19, 2026 | மூன்றாம் இடைப்பருவத் தேர்வு (1-9 ஆம் வகுப்பு) |
ஏப்ரல் 10, 2026 | முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம் | |
ஏப்ரல் 24, 2026 | இறுதி வேலை நாள் | |
ஏப்ரல் 25, 2026 | கோடை விடுமுறை தொடக்கம் |
இந்த நாட்காட்டி மாணவர்களின் கல்விப் பயணத்தை திட்டமிடவும், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளை சிறப்பாக வழிநடத்தவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் உதவும். புதிய கல்வி ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!